சிவகங்கை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று ஆயுள் தண்டனை தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் ஓட்டுனர் பூமி நாதன் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய அர்ஜுனன், அக்கினிராஜ்,சத்யராஜ் உள்ளிட்ட 11 குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
Discussion about this post