டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தம்பிதுரை பங்கேற்று உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்று உள்ளது. நாளை தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மத்திய அரசானது அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இதனையொட்டி அதிமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்கள் பங்கேற்று உள்ளார். முதல் பட்ஜெட் கூட்டத்தொடரானது நாளை தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கூட்டத்தொடர் மார்ச் 13 தொடங்கி ஏபரல் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு அவர்கள் உரையாற்ற உள்ளார். மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ற்கான பட்ஜெட்டினைத் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இது தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதனையொட்டி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்குகொண்டனர். குறிப்பாக அதிமுக சார்பில் எம்பி தம்பிதுரை அவர்கள் கல்ந்து கொண்டார். பிறகு அவரது ஆலோசனைகளையும் எடுத்து வழங்கியுள்ளார்.
Discussion about this post