கடலூர் அருகே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை பணியை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
புவனகிரி பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் உப்பு நீரால் கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தடுப்பணை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது தடுப்பணை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Discussion about this post