அதிமுக தான் தமிழகத்தை ஆளத் தகுதியான கட்சி எனச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலவே, அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்த்து வருவார் எனத் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி எனவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியாகும் பொய்யான கருத்துகளை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக தான் தமிழகத்தை ஆளத் தகுதியான கட்சி எனவும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.
Discussion about this post