எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மீது பொய் புகார் ஒன்றினை டிவிட்டரில் போலி கணக்கு வைத்துள்ள ஒரு நபர் பரப்பி வருகிறார். அவரது போலி ஐடி பெயர் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மோசடி பேர்வழி பகிர்ந்திருந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக நபர் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியிருப்பதாக உள்ளது. அந்த கடிதத்தில் உங்கள் சமூக ஆட்கள் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவு அளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்கிற ரீதியில் உள்ளது. மேலும் எதிர்கட்சித் தலைவரின் கையெழுத்தையும் போலியாக போட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தி போலியானது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியானது ஈரோடு கிழக்கில் அதிமுகவின் வெற்றியையும் எதிர்கட்சித் தலைவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் செய்யப்பட்ட நாடகம் என்று தெரியவந்துள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான கடிதம்.
Discussion about this post