கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளிலோ இலவச கல்வி பயில வழிவகை செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் இந்த நடவடிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதி சுமையை குறைக்க உதவும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே சிரமப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post