இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்பதால் அதிமுகவினர் தேர்தல் பணிகளை இப்போதிலிருந்தே துவக்கியுள்ளனர்.
டிடிவி தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்டதை அடுத்து, 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றத்தைச் சேர்த்து, 20 தொகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது.
இந்த 20 தொகுதிகளில் ஒன்றான பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவினர் கழக உத்தரவுப்படி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பூத் கமிட்டி அமைத்து இரவு பகல் பாராமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post