விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக தொடங்கியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வார விடுமுறை நாள் என்பதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல்லாயிரக்கணக்கன பக்தர்கள் பங்கேற்றுள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post