தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது ஊரடங்கின் போது, பொது மற்றும் தனியார் போக்குவரத்து அனுமதிக்க மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post