புயல் பாதித்த மாவட்டங்களில் சுகாதாரத் துறைக்காக சுமார் கூடுதல் நிதி- அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருந்து மாத்திரைகளுக்காக 4 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை, புயல் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலோ, வயிற்றுப் போக்கோ ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரம் குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் நடமாடும் மருத்துவ குழு, அரசு மருத்துவமனைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

9 ஆயிரத்து 35 மருத்துவ முகாம்களில் இதுவரை 5 லட்சத்து, 85 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 375 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 26 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றும், புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வரையில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version