நாடாளுமன்ற தேர்தல் கூடுதல் செலவினத்திற்காக 37 கோடியே 49 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காகத் தமிழக அரசின் சார்பாக 417 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் குறித்து அறிக்கை அளிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யகோபால் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவிற்காக 37 கோடியே 49 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் அதிகப்பட்சமாக வேலூர் தொகுதிக்கு 2 கோடியே 61 லட்ச ரூபாயும், சென்னைக்கு 2 கோடியே 17 லட்ச ரூபாயும் கூடுதல் செலவினத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் நிதியைப் பெற்றுப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கலாம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post