காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை வழக்கில் 100 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் எழுந்தது. 111 கிலோ எடையுடன் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் 63 கிலோ எடை கொண்ட ஏலவார்குழலி சிலைகளில் ஒட்டுமொத்தமாக 8 புள்ளி 77 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், பக்தர்களிடம் 100 கிலோ தங்கத்தை தானமாகப் பெற்ற போதிலும், போதியளவு தங்கம் சேர்க்காமல் மோசடி நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கும்பகோணம் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் பிள்ளை இல்லத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post