இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகத்தை குஜராத்தை சேர்ந்த அதானி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்றனர். ஹைஃபா துறைமுக ஒப்பந்தமானது முக்கிய மைல்கல் ஆகும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அதானி, இந்த ஒப்பந்தம் ஹைஃபா நகரத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டார். ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாள்வதில் அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பும் சரிவடைந்த நிலையில், இஸ்ரேலில் அந்நிறுவனம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், புதிய துறைமுக டெண்டரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் மிகப்பெரிய துறைமுகத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: acquiresAdani groupin IsraelIndialargest port
Related Content
விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! - கவுதம் கம்பீர் சர்ச்சை!
By
Web team
September 12, 2023
இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!
By
Web team
September 1, 2023
பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!
By
Web team
August 31, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் INDIA -வையா காப்பாற்றப் போகிறார்?
By
Web team
August 31, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
By
Web team
August 30, 2023