நடிகை சமந்தா உடல் நலம் குணமாக பழநி தண்டாயுதபாணி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றிய படி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மயோசிட்டிஸ் எனப்படும் தசை குறைப்பட்டால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்த தற்போது உடல்நலம் தேறி வருகிறார். குடும்பத்தாரின் வழிகாட்டுதலின் படியும் கடவுளின் ஆசியாலும் உடல் நலம் சரியாகிக் கொண்டு வருவதாக நடிகை சமந்தா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
Discussion about this post