உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை அர்ச்சனா கெளதம், திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பதி மலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற நடிகை அர்ச்சனா கெளதம், தரிசன டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கிருக்கும் ஊழியர்களுக்கும், நடிகை அர்ச்சனா கெளதமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திருப்பதி மலையில் உள்ள ஊழியர்கள், பக்தர்களுக்கு டிக்கெட் வழங்க மறுப்பதாகவும், இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நடிகை அர்ச்சனா கெளதம் பேசும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
मेरी लड़ाई किसी धर्म या किसी जाति या किसी मजहब से नहीं है। मेरी लड़ाई उन लोगों से है जो मंदिर में बैठते हैं। ट्रस्ट के नाम पर और दर्शन के नाम पर जनता को लूटते हैं। @shubhankrmishra @ABPNews @TvMeerut @TV9Telugu @ZeeNews @INCIndia @priyankagandhi @RahulGandhi https://t.co/kyKYpvNpMK
— Archana Gautam (@archanagautamm) September 6, 2022
Discussion about this post