கன்னட நடிகரை தாக்கியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகர் விமல் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகரான அபிஷேக் தற்போது அவன் அவள் அது என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தனது குடியிருப்பின் வளாகத்தில் அமர்ந்து செல்ஃபோன் பேசிக்கொண்டிருந்த அவரை களவாணி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விமல், மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து மது போதையில் வீண் தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அபிஷேக்கின் தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியான நிலையில், இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் விசாரணைக்கு விமல் ஆஜராகாமல், செல்ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் நடிகர் விமல் தலைமறைவாகியிருப்பதால், நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Discussion about this post