தனது உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை தன்னுடைய திரைப்படத்தில் உள்ள வசனங்களை போல் முனுமுனுக்க வைத்தவர் நடிகர் வடிவேலு.
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வடிவேலுவின் வசனங்கள் இல்லாமல் யாரும் கிண்டல் செய்வதில்லை. உதாரணமாக வந்துட்டான்யா வந்துட்டான்யா, சங்கி மங்கி, வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள, வண்டுமுருகன் போன்ற கதாபாத்திரங்கள் நம் கண் முன்னே வந்து நிற்கும். அப்படி அவர் புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அவரது புகைப்படம் இல்லாத சுவரொட்டிகளே கிடையாது.
வடிவேலுவை இணைத்துக் கொண்டால் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கதாநாயகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெருமளவு இருந்தது.
இப்படி வடிவேலுவின் வாழ்க்கை வண்ணமயமாய் உச்சத்தில் இருந்த பொழுது அவரது படத்தில் உள்ள வசனம் போல ,, வந்துட்டான்யா வந்துட்டான்யா,, என்கிற மாதிரி 2011 இடைத்தேர்தல் வந்தது. அப்போது அஇதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன.
விஜயகாந்த் மீது கொண்ட தனிப்பட்ட எதிர்ப்பினால் அவருக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்த வடிவேலுவிற்கு
திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து, திமுகவிற்கு நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூற, அதனை ஏற்று அப்படியே செய்தார் வடிவேலு.
ஆனால் அந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு அந்நாள் முதல் இந்நாள் வரை வடிவேலுவிற்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவுமே இல்லை. அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை கூட விரல் விட்டு எண்ணும் அளவிலேயே தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வடிவேலு அவர்களது மூன்றாவது மகள் திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு சென்ற வடிவேலுவிடம் செய்தியாளர் , சார் ஒரு பேட்டி என்று கேட்டபோது, பேட்டியாவது, வேட்டியாவது என கிண்டல் அடித்து விட்டுச் சென்றாராம் வடிவேலு.