தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் கலந்த படத்தின் டைட்டிலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழில் “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் பிக்சன் கலந்த படத்தை உருவாக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 14வது படமான இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கிய படப்பிடிப்பு காட்சிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020
இந்நிலையில், படத்தின் டைட்டிலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். படத்திற்கு “அயலான்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “அயலான்” என்றால் ஏலியன் சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.