மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தின் 130ஆம் ஆண்டு விழாவையொட்டிச் சிறப்பு அஞ்சல் தலையை நடிகர் ஷாரூக் கான் வெளியிட்டார்.
மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையம் 1869ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 8 தடங்களுடன் உள்ள இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டு 130ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டிச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர அமைச்சர் ஆசிஷ் சேலார், இந்தி நடிகர் ஷாரூக் கான், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பு அஞ்சல் தலையை ஷாரூக் கான் வெளியிட்டார். முன்னதாக ஷாரூக் கானைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பாந்த்ரா ரயில் நிலையத்தின் முன் குவிந்தனர்.
Discussion about this post