முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் சந்தித்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்திக், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டார். மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் அவர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.
Discussion about this post