’மதுரை சார்ந்த கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்’ – ’சினம்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண்விஜய் பேச்சு!

sinam movie arun vijay

மதுரை சார்ந்த கதைகளில் நடிக்க விருப்பமுள்ளதாக ‘சினம்’ படம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.

குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பல்லக் லால்வாணி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘சினம்’ திரைப்படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தங்கரீகல் தியேட்டரில் அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ’சினம்’ படத்தின் கதாநாயகன் அருண் விஜய், நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம், சினம் படத்தில் கோபத்திற்கான நியாயம் குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நெல்லை வட்டாரம் சார்ந்த படத்தில் நடித்ததாகவும், நீண்ட நாட்களாக மதுரை பின்னணியாக கொண்ட கதையில் நடிக்க ஆசை உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version