அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள, 12 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து தேர்வுக்கட்டணத்தைக் குறைக்கக் கோரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பேசிக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post