‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் கண் கருவிழி, கைரேகை பதிவுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, சில மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,அடுத்த ஆண்டு நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில் இவ்வாறு ஆள் மாறாட்ட மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேர்வினை நடத்துகிற தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அந்த முகமையின் தலைமை இயக்குனர் வினீத் ஜோஷி கூறுகையில், ஆள் மாறாட்ட மோசடியை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு எழுதுகிற மாணவ, மாணவிகளின் ஆதார் தகவல்களை பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் எனவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டால், மாணவ, மாணவிகளின் கைரேகை, கண்கருவிழி பதிவு ஆகியவை ஆதாருடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post