பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் நிரந்தரமாக மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சுற்றுச்சூழல் துறையின் விதிகளின் படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் சில மருத்துவமனையின் கழிவுகள் விதிகளை பின்பற்றாமல் சாலையோரங்களில், கொட்டப்படுவதாக புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் மருத்துவமனையின் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், தொடர்ந்து இதுபோல் நடந்தால் மருத்துவமனை முற்றிலுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post