திரையுலகில் பெண்களின் பாதுகாப்புக்காக, விசாகா கமிட்டியின் பரிந்துரைப்படி, குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தியாகராயநகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், மனோபாலா, பூச்சி முருகன், ரமணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விசாகா கமிட்டியின் பரிந்துரைப்படி, பெரும் குழு ஒன்று அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், பெரும்பான்மை மகளிர் உட்பட, மனவியல் ரீதியான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, மனநல மருத்துவர் ஒருவரும் இடம்பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு தளங்களில், அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காகவும், சுயமரியாதையை காக்கும் விதமாகவும், கண்காணிப்பு குழு அமைக்க, தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post