கோவை மாவட்டம் சூலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அதிமுக ஊராட்சிமன்ற தலைவரின் முடிவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் முத்து கவுண்டன்புதூர் அதிமுக ஊராட்சிமன்ற தலைவரான கந்தவேல் ஊராட்சி பகுதிகளை சுத்தமாக வைப்பது குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் அங்குள்ள உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் வீடியோ அல்லது புகைப்படங்களை ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு அனுப்புபவர்களுக்கு 500 ரூபாய் பரிசளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரை சுத்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post