கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த புகாரில், 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா சிகிச்சை அளிக்க 300-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வரையும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும் வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி செலுத்த 18 மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post