திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மகளிர் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட கல்லூரிகள், எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் விருந்தினர் மாளிகையில் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, திருவண்ணாமலை கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று இரவு எ.வ.வேலுவின் கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post