மக்களைத் தவறாக வழிநடத்துபவர்களாகத் தலைவர்கள் இருக்கக் கூடாது என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், மக்கள் கூட்டத்தில் இருந்தே தலைவர்கள் உருவாவதாகக் குறிப்பிட்டார். அதேநேரத்தில் மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவர்களாகத் தலைவர்கள் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார். நாட்டில் ஏராளமான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அவற்றில் லட்சக்கணக்கான மாணவர்களும் உள்ள நிலையில், அவர்களைப் போராடத் தூண்டிவிட்டு வன்முறைப் பாதைக்கு அழைத்துச் செல்வது தலைமைக்கு அழகல்ல எனவும் பிபின் ராவத் தெரிவித்தார். பிபின் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் அவர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post