கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 800 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் காவல்துறையினர் 4 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ளது தனியார் நிதி நிறுவனத்தில், பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்தநிலையில் அந்த தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 800 சவரன் நகை கொள்ளை போனதாக அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகைகள் வைத்திருப்பது யாருக்கெல்லாம் தெரியும் என்றும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post