பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்று நோய் குறித்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய பெண்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பிங்கத்தான் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பால் ஆண்டுதோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். அந்த வகையில் 6 ஆம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி சென்னை தீவுத்திடல் மைதானாத்தில் தொடங்கியது.
இதில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். காமராஜர் சாலை, பல்லவன் சாலை வழியாக பேரணி மீண்டும் தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.
Discussion about this post