இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் மோட்டார் வாகனங்கள் சட்ட திருத்த மசோதா மீதான விவாதங்களின் போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் மிக எளிமையாக ஓட்டுநர் உரிமம் பெறமுடிகிறது என்றார். ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புகைப்படமும், ஓட்டுநரின் புகைப்படமும் ஒத்துப்போவதில்லை என்றும், குறைந்தபட்ச அபராதத் தொகைகளுக்கு யாரும் பயப்படுவதும் இல்லை எனவும் அவர் கூறினார்.
ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக கூறிய அவர், தற்போது கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post