கரூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இளைஞர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர், வெங்கமேடு, கருப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இளைஞர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவில் இணைந்தனர்.
Discussion about this post