தீபாவளி முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காகப் பத்தாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டுச் சொந்த ஊருக்குச் சென்ற பயணிகள், தீபாவளி முடிந்ததும் சென்னை திரும்பிட வசதியாகச் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக நாள்தோறும் இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 1,600 பேருந்துகள் என 3,825 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையைத் தவிர்த்துப் பிற முக்கியப் பகுதிகளிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 2 ஆயிரத்து 964 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மொத்தமாக இன்று 6,789 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 28 ஆம் தேதி முதல் 30 தேதி வரை சுமார் பத்தாயிரம் பேருந்துகள் சென்னைக்கும், பிற பகுதிகளிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 6 ஆயிரத்து 689 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை ஏறத்தாழ 11 ஆயிரத்து 111 பேருந்துகள் இயக்கப்பட்டு, இதில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரத்து 630 பயணிகள் சென்னையிலிருந்து பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post