முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாளை ஒட்டி, இராமேஸ்வரத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கியது.
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அக்னிநாயகனும், இளைஞர்களின் வழிகாட்டியுமான அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமையன்று அனுசரிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நினைவு தின விழாவில்,அப்துல் கலாமின் உறவினர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், உள்ளிட்டோர் கலாம் சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, அப்துல் கலாமின் உருவம் மணல் சிற்பமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். இதனை அடுத்து நடைபெற்ற விழாவில், ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
Discussion about this post