இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய டிரெண்ட் உருவாகி வருகிறது.
அபிநந்தன் ஸ்டைலில் மீசையை, வட இந்தியாவை சேர்ந்த பலரும் வைத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
மேலும் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையை போல தாங்கள் வளர்க்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பல முடி திருத்தும் கடைகளில் வாடிக்கையாளர்கள் அபிநந்தன் ஸ்டைல் மீசையை மிகவும் ஆர்வமுடன் வைத்து கொள்கின்றனர்.
இந்தியாவில் பல குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அபிநந்தன் என்ற பெயரை சூட்டியுள்ளதாகவும், சில பெற்றோர்கள் பிறக்கப்போகும் குழந்தைக்கு அபிநந்தன் பெயரை சூட்ட தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Discussion about this post