இந்திய விமான படை வீரர் அபிநந்தன் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையின் போது, இந்தியா விமான படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் மிக் 21 ரக விமானத்தில் சென்றார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனின் விமானத்தை சுட்டு வீழ்த்தி அவரை சிறைபிடித்தனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிநந்தன் மீண்டும் இந்தியா திரும்பினார். அவருக்கு இந்திய அரசு சார்பில் வீர் சக்கரா விருது அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓய்வில் இருந்த அபிநந்தன் தற்போது மீண்டும் விமான பயிற்சியில் இறங்கியுள்ளார். விமான படை தளபதியுடன் அபிநந்தன் மிக்- 21 ரக விமானத்தை இயக்கி பயிற்சி மேற்கொண்டார்.
Discussion about this post