சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆவின் நிர்வாகம் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின்படி கத்தார் நாட்டுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. அதனை தொடர்ந்து கத்தார் நாட்டில் ஆவின் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குனர், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர், தமிழக கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post