நெல்லை ஆவின் நிர்வாகம் பால் முகவர்களுக்கான விலையை லிட்டருக்கு 40 காசுகள் உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அரை லிட்டருக்கு 20 காசுகளும் ஒரு லிட்டருக்கு 40 காசுகளும் விற்பனை விலையை உயர்த்தினால், அது பொதுமக்களுக்கு இரண்டு ரூபாயாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பால் விலையை நேரடியாக உயர்த்தாமல் சில்லறை விலையில் உயர்த்தினால், முகவர்களுக்கு லிட்டருக்கு 40 காசுகள் மட்டுமே லாபம் கிடைக்கும் என்பதால், ஆவின் பால் கொள்முதல் செய்வதை குறையும் என வேதனை தெரிவிக்கின்றனர். ஆவின் பால் விற்பனை அளவை குறைத்து, தனியார் பால் விற்பனையை ஊக்குவிக்க ஆவின் நிர்வாகம் மறைமுகமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Discussion about this post