அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அன்னதான திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர், ஜூலை 1-ம் தேதி முதல் 24-வது நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஜூலை 31 வரை சயனக் கோலத்திலும் அதன்பின் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை நேற்று தரிசனம் செய்ததுடன், பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும் அத்திவரதரை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதியுதவி செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நன்கொடை வழங்க விரும்புபவர்கள் தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு பணமாகவோ, காசோலையாகவோ அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post