மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செயலியை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்து ஜிபிஎஸ் தொடர்பில் இருந்தால் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் நமது அருகில் வரும்போது நமக்கு தெரியப்படுத்திவிடும். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியுமென கூறும் மத்திய சுகாதாரத்துறையினர், அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தவேண்டுமெனஅறிவுறுத்தி வருகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருப்பது கட்டாயம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துமாறு கேட்டு கொண்டார். இந்த நிலையில், ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த செயிலியில் இருந்து தகவல்களை திருடினால் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post