டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலரின் வீடு மற்றும் தொழிற்சாலையில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு டெல்லி சாந்த்பாக் பகுதியை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா, அண்மையில் நடந்த வன்முறை சம்பவத்தின் போது, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அங்கித் சர்மாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் ஹூசைன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவரது வீட்டில் இருந்து கற்கள் மற்றும் ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, ஹூசைனின் வீடு மற்றும் தொழிற்சாலையில் காவல்துறையினர், தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதனிடையே, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
Discussion about this post