ஆடி மாதம் முதல் நாளையொட்டி நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரிய தேங்காய் சுடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல்லை சுற்றியுள்ள பரமத்தி வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர். முதலில் தேங்காயை நார் முழுவதும் நீக்கி, ஒரு கண்ணில் துளையிட்டு நீரை வெளியேற்றுகின்றனர். பின்னர் அதில் மஞ்சள் பூசி எள்,கடலை, வெல்லம் உள்ளிட்டவற்றை நிரப்பி சுடுகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் பண்டத்தை கடவுளுக்கு படைத்து விட்டு நண்பர்களுடன் பகிர்ந்து உண்கின்றனர். இந்த திருவிழாவினால் தங்களுக்குள் ஒற்றுமை அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post