ஆடி அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடி, விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். முன்னோர்கள் நினைவாக ஆடி அமாவாசை தினத்தன்று திதி தர்ப்பணம் செய்தால், இறந்தவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் காலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரை, காவிரி, பவானி ஆறுகளிலும் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். குற்றாலத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு நடத்து வருகின்றனர். இதேபோன்று, கன்னியாகுமரி, வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் ஏராளமான பக்தர்கள், ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வருகின்றனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
-
By Web Team

- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: அக்னிதீர்த்தஆடி அமாவாசைமுன்னோர்களுக்கு திதிராமேஸ்வரம் மீனவர்கள்
Related Content
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்... கரைதங்கிய படகுகள்
By
Web Team
April 15, 2021
ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு
By
Web Team
July 31, 2019
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்
By
Web Team
July 22, 2019
சூறைக்காற்று அச்சுறுத்தல்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
By
Web Team
July 6, 2019
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை
By
Web Team
March 13, 2019