வங்கிக்கணக்கு தொடங்கவும்,சிம்கார்டு வாங்கவும் ஆதார் கட்டாயமில்லை

வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் விருப்பத்தின் பேரில் ஆதாரை அடையாள ஆவணமாக அளிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2வது தவணைக்கான நிதியுதவியை பெற சிறுகுறு விவசாயிகள் தங்களது ஆதாரை சமர்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆதாரை பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள், தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வலியுறுத்தியிருக்கும் மத்திய அமைச்சரவை, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் சிம் கார்டு வாங்குவதற்கும், விருப்பத்தின் பேரில் ஆதாரை அடையாள ஆவணமாக அளிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம், ஆதாரை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது என்றும் தனியார் நிறுவனங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்போருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சட்டத்திற்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version