ஆதார் அட்டை வைத்துள்ளோர் எண்ணிக்கை 125 கோடி என்னும் புதிய மைக்கல்லை எட்டியுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்திய மக்களுக்காக அதிகாரப் பூர்வ அடையாளமாக ஆதாரைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இதன் மூலம் இந்திய மக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. மற்ற அடையாள அட்டைகளைப் போல ஆதாரும் அடையாள அட்டையாகக் கருதப்படும் நிலையில், தற்போது வரை ஆதார் அட்டை வைத்திருப்போர் எண்ணிக்கை 125 கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதாரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் 12 இலக்க எண்ணுடன் இந்தியா தனித்துவமாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.
Discussion about this post