ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு : தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க முடிவு

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் விதமாக, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நேற்று இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் விதமாக,  தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version