வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி நிலை அறிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வரப்படும் என்றும், வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மின்சார வாகனங்கள் வாங்கினால் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இனி வருமான வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக 1 லட்சத்து 50 ஆயிரம் வரிச்சலுகை தரப்படும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post