சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண் தேன்மொழி சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேந்தர் என்பவருடன் சேத்பட் ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த இளைஞர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்தை காயமடைந்த இளம் பெண் கீழ்பாக்கம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிகப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இருவருக்கும் நினைவு திரும்பாத நிலையில் கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. காதல் விவகாரத்தால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post