தாம்பரம் அருகே சிறுமியை நோட்டமிட்டு வீட்டிற்குள் அத்துமீறிச் சென்ற இளஞரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த சிறுமியை இளைஞர் ஒருவர் வெகு நேரம் நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்துச் சிறுமி வீட்டிற்குள் செல்வதை கவனித்த அந்த மர்ம நபரும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதனைக் கண்ட சிறுமியின் தந்தை அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்து நழுவ முன்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்ததுடன் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Discussion about this post